search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது-முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது-முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு

    • தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை.
    • ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. புதுவையில் உள்ள பல் மருத்துவம், மேலாண்மை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட எந்த கல்லூரியில் தரவரிசை பட்டியலில் இல்லை. ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.

    பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சமுதாயத்துக்கு உரிய எந்த பலனும் இத்துறையில் ஏற்படவில்லை. இதை உணராமல் தன் இயலாமையை புகழ்பாடி கொண்டிராமல் சரியான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்.

    தற்போதுள்ள நிலையில் புதிய நிறுவனங்களை தொடங்குவதை காட்டிலும், இருக்கும் நிறுவனங்களை சீர்செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கல்லூரிகளையும் தேசிய தரக்கட்டுப்பாடு வாரியத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு குறைகள் களையப்பட வேண்டும்.

    புதுவையில் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு கவர்னர் உடனடியாக ஆட்சிமன்ற குழுவை உருவாக்க வேண்டும். அரசாங்கம் நன்கு திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வும், கல்லூரிகளின் அக கட்டு மானத்தை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒரு தர கட்டுப்பாட்டு மையம் வைப்பதும், ஆசிரியர்களை மாணவர்கள் மதப்பீடு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்பதும், கற்பித்தலில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, தொழிற்சாலை கல்லூரி இணைந்த செயல்பாடு போன்ற நடவடிக்கைகளால் வரும் காலத்தில் மத்திய அரசின் மதிப்பீட்டின் தரவரிசையில் முன்னேற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×