search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு தரமான உணவு வழங்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து
    X

    மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் நோட்டுபுத்தகம் வழங்கிய காட்சி.

    மாணவர்களுக்கு தரமான உணவு வழங்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து

    • அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை
    • நோட்டு புத்தகம் வழங்கி பேசியதாது: கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் நோட்டு புத்தகம் வழங்கி பேசியதாது: கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்விக்கு மட்டும் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். சீருடை, சைக்கிள், பாடபுத்தகம் அரசே வழங்குகிறது. மாலையில் சிறுதானிய உணவு கொடுக்க உள்ளோம்.

    புரோட்டின் சத்து தேவை என்பதால் வாரத்துக்கு 2 முட்டை வழங்கிய நிலையில், 3 முட்டை வழங்க அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு கலவையான, தரமான உணவு வழங்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதிய உணவை தரமாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தங்கவிக்ரமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×