search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய நினைவு பேரரங்கம் திறப்பு
    X

    புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியின் 175-ம் ஆண்டு புதிய நினைவுப் பேரரங்கம் திறப்பு விழாவில், புதுச்சேரி-கடலூர் மறை மவாட்டப் பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட்க்கு, வைத்தியலிங்கம் எம்.பி. நினைவு பரிசு வழங்கினார். 

    புதிய நினைவு பேரரங்கம் திறப்பு

    • மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
    • அனைத்து கட்டிடங்களிலும் அருட்தந்தையர்களால் புனித நீர் தெளிக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு175 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் புதியதாக175 ஆம் ஆண்டு நினைவு பேரரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இந்த திருப்பலி நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனை

    தொடர்ந்து பள்ளியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் அருட்தந்தையர்களால் புனித நீர் தெளிக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கா லிஸ்ட் ஆசியுரை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வைத்தியலிங்கம் எம்.பி., உப்பளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் வரவேற்புரையாற்றினார்.

    விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் பள்ளியின் துணை முதல்வர் ஜான்பால் நன்றி கூறினார்.

    Next Story
    ×