search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் இந்தியகம்யூனிஸ்டு  மனு
    X

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் மனு அளித்த காட்சி.

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் இந்தியகம்யூனிஸ்டு மனு

    • அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமாரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
    • அத்தியாவசிய உணவுப்பொருள் வழங்கும் முறை நடைமுறையில் இல்லை.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமையில் கட்சியினர் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமாரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மத்திய அரசு நேரடி பண பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்தியது. இதனால் பல ஆண்டாக பொது விநியோக திட்டம் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருள் வழங்கும் முறை நடைமுறையில் இல்லை. பொதுவிநியோக திட்டத்தின் மூலம் அரிசி, கோதுமை, ரவை, சர்க்கரை, பாமாயில் உட்பட உணவுப்பொருட்கள் வழங்கினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைவர்.

    மத்திய உணவுத்துறை 30 சதவீத மானியத்தில் உணவுப்பொருட்களை வழங்கலாம். மத்திய அரசு இந்த ஆண்டு முழுவதும் பொது விநியோக திட்டத்தில் உணவுப்பொருட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

    மத்திய அரசு இதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே அறிவித்ததுபேல ரேஷன்கடைகளை திறந்து உணவுப்பொருட்களை வழங்கலாம்.

    ரேஷன்கடை கூட்டுறவு சங்கத்தினரை அழைத்து பேசி மத்திய அரசின் பிரதம மந்திரி அன்னயோஜனா திட்டத்தை இணைத்து புதுவையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது மாநில துணை செயலாளர் சேது செல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மாநில பொருளாளர் வ.சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×