search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசின் உத்தரவுகளை ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகம் பின்பற்ற உத்தரவு
    X

    கோப்பு படம்.

    அரசின் உத்தரவுகளை ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகம் பின்பற்ற உத்தரவு

    • கவர்னருக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
    • மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைமாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் பெய்துவரும் தொடர் கனமழையால் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள விடுமுறை அறிவித்தும் மத்திய பல்கலைக்கழகம் வழக்கம்போல இயங்கியது.

    கனமழை போன்ற பேரிடர் காலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவதன் நோக்கம் மாணவர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.

    புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு புதுவை மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.

    கனமழையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், அதைத்தொடர்ந்து புதுவையிலும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    ஆனால் புதுவை மாநில எல்லை வரம்புக்குள் உள்ள மத்திய பல்கலைக்கழகமும், மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியும், அரசு உத்தரவை பின்பற்ற வில்லை. இது மாணவர்களின் உயிருக்குத்தான் ஆபத்தாக விளையும்.

    இனிவரும் காலத்தி லாவது புதுவை அரசின் உத்தரவுகளை மாணவர்களின் நலன் கருதி மத்திய பல்கலைக்கழகம், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி ஆகியவை பின்பற்ற கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    Next Story
    ×