search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விபத்து நடந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி காலாப்பட்டு போலீஸ் நிலையம் முற்றுகை -மறியல்
    X

    காலாப்பட்டில் மீனவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையில் ஈடுபட்டு மறியல் செய்த காட்சி.

    விபத்து நடந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி காலாப்பட்டு போலீஸ் நிலையம் முற்றுகை -மறியல்

    • விபத்து நடந்த தொழிற்சாலையை பொதுமக்கள் அடித்து சூறையாடிய நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் காலாப்பட்டு கோயிலில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காயமடைந்த அனைவரும் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த தொழிற்சாலையை பொதுமக்கள் அடித்து சூறையாடிய நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையை முழுமையாக மூட வேண்டும் என்று கூறி இன்று காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனகச் செட்டிகுளம், பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ பஞ்சாயத்து நிர்வாகி வேலு தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த தனியார் தொழிற்சாலை மீது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். மேலும் அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு உறுதி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. விபத்து நடந்த தனியார் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    இதனை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் காலாப்பட்டு கோயிலில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுமார் ஒரு மணி நேர மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×