என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
- மாணவர்களுக்கு எதிர்கட்சித்தலைவர் சிவா அழைப்பு
- மாணவர்களுக்கு முதல் பரிசு கேடயத்துடன் ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
புதுச்சேரி:
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஆண்டுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவை மாநில தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது.
மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார் வரவேற்கிறார். திருபுவனை தொகுதி செயலாளர் செல்வபார்த்திபன், பொறியாளர் அணி நிர்வாகிகள் மணிகண்டன், உமாபதி, முகுந்தன், சுவர்ணராஜ், எழிலரசன், அர்ஜூன், பிரகாஷ், ரமேஷ், பிரபாகரன், வீரமணிகண்டன், சுவாதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
போட்டியை, மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், அணி செயலாளர் கருணாநிதி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அவைத் தலைவர்
எஸ்.பி.சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. உட்பட கட்சியினர் பலர் பங்கேற்கின்றனர்.
தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்தவர் கலைஞர், தொழில் துறையை உயர்த்தியவர் தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்புகளில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த இளங்கலை, முதுகலை பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.
மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு கேடயத்துடன் ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
இதில் வெற்றி பெறுபவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறலாம். இறுதிச் சுற்றில் வெல்பவர்க்கு ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படும்.
இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்படி புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்