என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
- குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.
- இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.
புதுவை மருந்து உற்பத்தி யாளர்கள் சங்க அலுவ லகத்தில் நடந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்ட மைப்பின் வேண்டுகோளை ஏற்று வழுதாவூர் சாலை புதுவை எல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை யில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தி கொடுத்த
தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹேம சந்திரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வருகிற 12-ந் தேதி குரும்பாப்பட்டு சமுதாய நல கூடத்தில் நடைபெறும் கண்காணிப்பு கேமரா தொடக்க நிகழ்ச்சி மற்றும் ஊசுடு தொகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமை யில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
முடிவில் குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு செயலாளர் மோகன் நன்றி தெரிவித்தார்.