search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டாக்டர்கள் இல்லாததை கண்டித்து விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம்
    X

    நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர்கள் இல்லாததை கண்டித்து விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம்

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஊழியர்கள் என பணியில் உள்ளனர்.
    • தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கரியமாணிக்கம், பண்ட சோழநல்லூர், கல்மண்டபம், வடுவகுப்பம், செம்படபேட்டை, நடுநாயகபுரம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவார்கள்.

    நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஊழியர்கள் என பணியில் உள்ளனர்.

    வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெற காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே சீட்டு பதிவு செய்யப்படுவதால், கூட்டம் அதிகமாக காணப்படும் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் அனைவரையும் அவரே கவனிக்க வேண்டிய உள்ளது.

    இதனால் வெளிப்புற நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

    மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், ஆம்புலன்ஸ் இருந்தால் டிரைவர் பற்றாக்குறை இருப்பதாக குற்றம் சாற்றுகின்றனர்.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மாநில துணைச் செயலாளர் கதிர் பிரபாகரன் மற்றும் தொகுதி செயலாளர் மலரவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நெட்டப்பாக்கம் போலீஸ் (பொறுப்பு) சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வட்ட ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×