என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுவையில் குறைந்த மின் அழுத்தம் அதிகரிப்பு
- மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
- நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பிற மாநிலங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. புதுவை மாநிலத்தின் மின்தேவை சுமார் 600 மெகாவாட். சராசரியாக தினமும் 520 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து புதுவைக்கு வருகிறது.
சில நாட்களாக மத்திய தொகுப்பிலிருந்து 400 மெகாவாட் மட்டுமே மின்சாரம் வருகிறது. 120 மெகா வாட் குறைந்துள்ளதால் புதுவையில் பல பகுதிகளில் மின் அழுத்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்கள் மட்டு மின்றி, நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.
இதனால் மின்சாதன பொருட்கள் அதிகமாக சேதமடைகின்றன. வழக்கமாக கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும். மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
இதை சமாளிக்க மின் மாற்றியின் திறனை அதிகரிக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.