என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்
- தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- மினி லாரியில் ஆற்று மணலை பதுக்கி வைத்து அதன் மேல் வைக்கோல் போர் போட்டு நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் பாகூர் மாஞ்சோலை சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்தும் மணல் கடத்தி சென்றவர் மினி லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். சந்தேகமடைந்த போலீசார் மினி லாரியை சோதனை செய்தனர்.
அப்போது மினி லாரியில் ஆற்று மணலை பதுக்கி வைத்து அதன் மேல் வைக்கோல் போர் போட்டு நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மினி லாரியை பறிமுதல் செய்து பாகூர் போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மணலை கடத்தி செல்ல பயன்படுத்திய மினி லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும், தப்பியோடியவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஆற்றில் மணல் கடத்தல் நடந்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.