search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குருமாம்பேட்டை குப்பை கிடங்கில் அமைச்சர் ஆய்வு
    X

    சாய்.ஜெ.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த காட்சி.

    குருமாம்பேட்டை குப்பை கிடங்கில் அமைச்சர் ஆய்வு

    • ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் உள்ள அனைத்து குப்பைகளும் உயிரிமயமாக்கல் முறையில் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது
    • இக்குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் முழுவதையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அகற்றுவதற்கு புதுவை அரசு முயற்சியெடுத்து தயாரித்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

    புதுச்சேரி:

    ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் உள்ள அனைத்து குப்பைகளும் உயிரிமயமாக்கல் முறையில் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இக்குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் முழுவதையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அகற்றுவதற்கு புதுவை அரசு முயற்சியெடுத்து தயாரித்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

    இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.42.7 கோடி மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதியில் புதுவை நகர வளர்ச்சி முகமையினால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் 7.5 லட்சம் டன் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலன் கடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமாரரிடம் குப்பைகளால் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும், ஈக்கள் அதிகம் வருவதாகவும் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பைகள் மறுசுழற்சி செய்யும் இடத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆய்வு செய்தார்.

    அப்போது அதிகாரி களிடம் பணிகளை எப்போது முடிப்பீர்கள், பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர். எனவே அதற்கு தீர்வு காண வேண்டும். சுகாதாரமான முறையில் மக்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து 8 மாதத்தில் பணிகள் முடித்து ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் விரைந்து பணியை முடித்து மக்கள் நலமுடன் வாழ வழிவகை செய்து கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    இதில் பா.ஜனதா நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குருமாம்பேட் குப்பை கிடங்கை அமைச்சர்

    Next Story
    ×