search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
    X

    ரெயின்போ நகர் பகுதியில் மழை சேதங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்ட காட்சி.

    தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு

    • புதுவையில் மழை பாதிப்புகளை முதல் அமைச்சர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் மழை பாதிப்புகளை முதல் அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    கிழக்கு கடற்கரை சாலை, மடுவூபேட், சாமி பிள்ளை தோட்டம், ரெயின்போ நகர்,பவழ நகர், வாழைக்குளம் ஆகிய பகுதி களில் ஆய்வு செய்தனர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் மூலம் நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

    புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை இல்லை.நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருதால் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியவில்லை.

    புதுவை மற்றும் உழவர்ரை நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தேவையான இடங்களில் மோட்டார்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×