search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உடல்நல பரிசோதனை முகாம்
    X

    நீரிழிவு நோய்கள் குறித்து டாக்டர் எம்.ஆர். வித்யா விளக்கிய காட்சி.

    எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உடல்நல பரிசோதனை முகாம்

    • 30-ந் தேதி வரை நடக்கிறது
    • நீரிழிவு நோய் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவசியம் தேவை.

    புதுச்சேரி:

    புதுவை இ.சி.ஆர். மெயின் ரோடு லாஸ் பேட்டையில் அமைந்துள்ள எம். வி. ஆர். மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் மருத்துவ முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, ரத்த சோகை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை, இருதய பரிசோதனை, மார்பு எக்ஸ் ரே, வயிற்றுப்பகுதிக்கான ஸ்கேன், கண் விழித்திரை புகைப்படம், பல், நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோத னைகள் அனைத்தும் ரூ.9000 மதிப்புள்ள பரிசோதனை கள் சிறப்பு கட்டணச்சலுகை யில் ரூ.4500-த்திற்கே செய்யப்படுகிறது.

    இம்முகாமில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலெஸ்டிரால், உடல் பருமன் உடையவர்கள், கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்பட்ட பெண்கள், இருதய மற்றும் சிறுநீரக பாதிப்புடை யவர்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.

    மேலும் மயக்கம், தலைசுற்றல், கால்வீக்கம், சிறுநீர் கழிக்கு ம்போது எரிச்சல், கால்குத்தல் வலி, எரிச்சல் , காலில் ஆறாத புண், வீக்கம், கால் மரத்துப்போன நிலை, காரணமற்று உடல் எடை குறைதல், உடலில் அடிக்கடி அரிப்பு, கட்டி, கொப்புளம் ஏற்படுதல், மூச்சு திணறல், நெஞ்சு வலி மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறி உடைய வர்கள் மற்றும் பொதுவான உடல் நல பரிசோதனைகள் செய்ய விரும்புபவர்களும் இம்முகாமில் பங்குபெற்று பயன்பெறலாம்.

    இதுகுறித்து எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் மருத்துவ இயக்குனரும், இந்திய மருத்துவ கழகத்தின் புதுச்சேரி மாநில பெண்கள் பிரிவு துணைத்தலைவரும், நீரிழிவு நோய் நிபுணருமான டாக்டர் எம்.ஆர்.வித்யா கூறியதாவது:-

    நீரிழிவு நோய் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவசியம் தேவை.

    பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வருடந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களை எங்களது மருத்துவமனை மூலம் நடத்தி வருகிறோம்.

    பரிசோத னைகள் மூலம் பலரும் அபாயகரமான உடல் பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். புதுச்சேரி யில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆய்வின்படி 25 சதவீதம் அளவுக்கு நீரிழிவு நோயும், 26சதவீதம் அளவுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை யும் காணப்படு வதால் பொதுமக்கள் 35 வயதிற்கு மேல் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்நல பரிசோதனைகள் செய்துகொள்ளுவது மிகவும் முக்கியமானது.

    முகாமில் கலந்துகொள் வோருக்கு உடற்கூறு பகுப்பாய்வு செய்து உடல் கொழுப்பு அளவை குறைக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமிற்கான ஏற்பாட்டினை எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் மேலாளர் தேவதாஸ், சச்சிதானந்தம் மற்றும் செலின் ஆகியோர் செய்துள்ளனர். முகாமில் முன்பதிவு செய்து பயன்பெற தொலைபேசி எண்களில் 9047791662, 0413-2252662, 2257662/63 தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×