என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆட்சி அமைந்தவுடன் கூட்டணியை அடிச்சுவடு இல்லாமல் செய்துவிட்டனர்
- அன்பழகன் குற்றச்சாட்டு
- நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் திருக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
முன்னாள் கவுன்சிலர் மகாதேவி தலைமை வகித்தார். மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் நாசர், பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
பா.ஜனதா கூட்டணி அரசில் அ.தி.மு.க.வுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆட்சி அமைந்தவுடன் தேசிய ஜனநயாக கூட்டணி இருந்ததற்கான அடிச்சுவடு இல்லாமல் செய்துவிட்டனர்.
கூட்டணி கட்சிக்கு உழைத்த நாம் ஓய்ந்துவிட்டோம். நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.
புதுவை அரசின் அமைச்சரவையில் 2-ம் இடத்தில் உள்ள அமைச்சர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு சர்க்கரை ஆலை உட்பட மூடப்பட்ட எந்த ஒரு தொழிற்சாலையும் இதுவரை திறக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்க வில்லை. ஆட்சி சுகமே என்னவென்று தெரியாமல் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என கூட்டணி கட்சிகளுக்காக அதிமுகவினர் உழைத்து, அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தோம்.
இதற்கு மேலும் நாம் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. தனியாக போட்டியிட வலியுறுத்துவோம். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலர நாம் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி குணசேகரன், நாகமணி, காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்