search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்கள் எதிர்ப்பை மீறி சூதாட்ட கிளப் திறப்பு
    X

    சூதாட்ட கிளப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    மக்கள் எதிர்ப்பை மீறி சூதாட்ட கிளப் திறப்பு

    • கோதாவரி ஆற்றின் கரையில் புதுவை யூனியன் பிரதேசமான ஏனாம் உள்ளது.
    • போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

    புதுச்சேரி:

    ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளையாகிய கவுதமி கோதாவரி ஆற்றின் கரையில் புதுவை யூனியன் பிரதேசமான ஏனாம் உள்ளது.

    ஏனாமில், மனமகிழ் மன்றம் பெயரில் 20-க்கும் மேற்பட்ட சூதாட்ட விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல மன்றங்கள் அரசின் அனுமதியின்றி இயங்குவதாக அரசியல் கட்சிகள் புகார் கூறின. இதனால் அனுமதி பெறாத மன்றங்கள் மூட அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதற்கிடையே அனுமதியுடன் செயல்படும் சில மனமகிழ் மன்றத்தில் தினமும் பல கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றது. இவற்றுடன் சேர்த்து அனைத்து மன்றங்களையும் ஏனாம் மண்டல நிர்வாகம் மூட உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விக்டரி என்ற மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியிருப்புக்கு மத்தியில் இந்த மணமகிழ் மன்றத்தை இயக்குவதற்கு கடுமையாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கவர்னராக உள்ள தமிழிசை பெண்களின் பிரச்சினையை உணர்ந்து மனமகிழ் மன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீதிமன்றத்திற்கு தீர்பபுக்கு பிறகு அனைத்து விதிகளை பின்பற்றி திறக்கப்பட்டு ள்ளதாக மன்ற மேலாளர் பாப்பா ராவு தெரிவித்தார்.பொது மக்களின் போராட்டத்தை மீறி மன்றம் செயல்பட தொடங்கி யுள்ளதால் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×