search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு பிரச்சார பயணம்
    X

    ஓைடவெளி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பயனாளிக்கு சான்று வழங்கிய காட்சி. 

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

    • மத்திய சுகாதாரத்துறை செயலர் பங்கேற்பு
    • விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் திட்டங்க ளையும் அதன் பயன்பாட்டை யும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், ''நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மணவெளி தொகுதி ஓடை வெளி கிராமத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய அரசு சுகாதாரத்துறை செயலர் சுதன்ஷ் பண்ட் பங்கேற்றார். மாவட்ட கலெக்டர் வல்லவன் முன்னிலை வகித்தார்.

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், நோடல் அதிகாரி ராதாக்கிருஷ்ணன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் குறித்த விளக்க கூடிய வாகனம் நிறுத்தப்பட்டு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

    இதில், மத்திய அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தேசிய அளவில் பல

    துறைகளில் வெற்றி பெற்ற வீரர்கள் கவுரவிக்கப்பட்ட னர். ஜல் ஜீவன் திட்டம் மூலம் நிறை பெற்ற குடிநீர் திட்டத்தின் சான்றிதழ் அந்தந்த கிராமத்தின் கிராம குடிநீர் சுகாதார குழுவிற்கு வழங்கப்பட்டது.

    இதேபோல், அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் கிராமத்தில் நடந்த நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு, பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், நேருயுவ கேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×