search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.12 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
    X

    மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

    ரூ.12 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

    • 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
    • 25 ஆயிரம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் பகுதி வளர்ச்சியை கருதி 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    ஹட்கோ, அம்ருத் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் உந்து குழாய்கள், விநியோக குழாய்கள், மோட்டார் பம்புசெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியின் மூலம் வைத்திக்குப்பம், குருசுகுப்பம் சார்ந்த பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    ரூ.12 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். விழாவிற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.

    பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் சுப்பாராவ், இளநிலை பொறியாளர் லோகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தோடு இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×