search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருந்தாளுனர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கிய காட்சி.

    மருந்தாளுனர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்றார்.

    புதுச்சேரி:

    உலக மருந்தாளுநர்கள் தினம் புதுவை பார்மசி கவுன்சில் சார்பில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

    உலக மருந்தாளுநர் தினத்தையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசுகளை வழங்கி பேசினார்.

    அவர்பேசியதாவது:-

    சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் மருந்தாளுனர்களின பங்கு இன்றியமையாதது. அவர்களின் சேவை மகத்தானது. புதுவை அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப ப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பொது சுகாதார இணை இயக்குனர் டாக்டர் முரளி, அன்னை தெரசா கல்வி நிறுவன முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், பார்மசி கவுன்சில் தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுன்சில் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, விமல்ராஜ், ஜெயபிரகாஷ், பதிவாளர் பாலமுருகன் செய்தி ருந்தனர். சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பார்மசி கவுன்சில் உறுப்பினர் கவிமணிக்கு வாழ்த்து தெரி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×