search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் ‘பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா’ பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
    • மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவிகள் 25 பேர் பங்கறே்ற புதுமைப்பெண் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் 'பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா' பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.

    புரட்சிக் கவிஞர் போற்றிய பாரதியார் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் வேணுகோபால், ராசசெல்வம், கோவிந்தராசு, கிருட்டிணகுமார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்னிலை வகித்தனர். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவிகள் 25 பேர் பங்கறே்ற புதுமைப்பெண் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    மேலும் படைப்பாளி ரமேஷ்பைரவி, பாவலர் சரசுவதிவைத்தியநாதன் நெறியாள்கை செய்தனர். தேர்வுபெற்ற மாணவிகள் 6 பேருக்குத் தொழில் முனைவர் பாவலர் அருள்செல்வம் ெதாகை ரூ.4 ஆயிரம் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

    இதில் தமிழறிஞர்கள், கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் வள்ளி, கலைமாமணி செல்வதுரை நீஸ், நாடகக் கலைஞர்மோகன், பாவலர்கள் விசாலட்சி விழா ஏற்பாடுகனைச் செய்திருந்தனர். தொடக்கத்தில் பாவலர் ராஜஸ்ரீமகஷே் வரவேற்றார் முடிவில் நிஷாகோமதி நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×