search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவாகரத்து கேட்டு கோர்ட்டில் புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் மனு
    X

    விவாகரத்து கேட்டு கோர்ட்டில் புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் மனு

    • கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் தெரிவித்தார்.

    இந்தநிலையில் சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். வக்கீல்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபிரியங்கா தானே நேரடியாக குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தான் ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனை தட்டி கேட்டதால் அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னை சண்முகம் கட்டுப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சந்திரபிரியங்கா முன் வைத்துள்ளார்.

    மேலும் குடிகாரன், பெண் வெறியன், தன் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண், தன்னைப் பற்றி கிசுகிசுக்களைப் பரப்பும் மற்றும் பேசும் ஒரு ஆணுடன் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்து இதை தாக்கல் செய்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கணவருடனான சந்திரபிரியங்காவின் மோதல் தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டு வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×