search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில உரிமைகளை நிலைநாட்ட ரங்கசாமி போராட வர வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மாநில உரிமைகளை நிலைநாட்ட ரங்கசாமி போராட வர வேண்டும்

    • இந்திய கம்யூனிஸ்டு அழைப்பு
    • மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தன்னுடைய அதிகாரம் முற்றிலும் பறிபோய் முதல்-அமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்து இருக்கிறோம் பின்பக்கமாக வெளியே சென்று விடலாம் போல இருக்கிறது என்று ரங்கசாமி பகிரங்கமாக கூறுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் என் கூற்றை மதிப்பதில்லை, மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை தினந்தோறும் மன உளைச்சலாக இருக்கிறது என்று புலம்பினார்.

    கடந்த ஆகஸ்ட்டு மாதம் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் மக்களின் நலனுக்காக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று தீர்மானம் மூலமாக அறைக்கூவல் விடப்பட்டது. டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டத்தை எதிர்த்து முதல் அமைச்சர் ரங்கசாமி குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் முதல்-அமைச்சர் இதை செவிமடுக்கவில்லை.

    பா.ஜனதாவின் கொள்கை கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.

    புதுவை மண்ணின் விடுதலையை பேணிக்காக்க, மாநில உரிமைகளை நிலைநாட்டிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் ஜனநாயகத்தை பாதுகாத்திட முதல அமைச்சர் ரங்கசாமி அரசியல் உறுதியுடன் செயல்பட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். புலம்பிப் பயனில்லை போராட முன்வாருங்கள் என்று ரங்கசாமியை மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறோம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×