search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பு ரூ.24.26 லட்சத்தில் புனரமைப்பு
    X

    சேதராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பு புனரமைப்பு பணி அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பு ரூ.24.26 லட்சத்தில் புனரமைப்பு

    • ரூ.24.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
    • அமைச்சர் சாய்‌.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புகள் சுமார் 10 வருடமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக இருந்த வந்தது.

    இந்நிலையில் இந்த குடியிருப்புகளை சீரமைக்க ரூ.24.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. சேதராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி, செயற்பொறியாளர் வள்ளவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி, பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் தியாக ராஜன், துணைத்தலைவர் சதாசிவம், கிளை தலைவர்கள் தேவா, பிரதீப், நரேஷ், மதன், கட்சி நிர்வாகிகள் புருஷோத்த ம்மன், ஏழுமலை, பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×