என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சாலையோர கடைகளை அகற்ற வேண்டும்
- புதுவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றது.
- இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும், தள்ளுவண்டிகளும் வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
புதுச்சேரி:
மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றது. இதில் அன்றாட வயிற்று பிழைப்புக்காக தள்ளுவண்டி உள்ளிட்டவைகள் மூலம் வைத்துள்ள நடைபாதை கடைகளும் அகற்றப்பட்டு வருகின்றது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும், தள்ளுவண்டிகளும் வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
ஆனால் சாலையோர கடைகளை அகற்ற வரும் அதிகாரிகள் முதலில் எளிதில் அகற்ற கூடிய வகையில் உள்ள கடைகளைத்தான் அகற்றி வருகின்றனர். இவ்வளவுக்கும் அவர்கள் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு வரிகளையும் செலுத்தி வந்துள்ளனர். அதற்கான ரசீதுகளை காண்பித்தாலும் அகற்றப்பட்டு வருகின்றது.
மேலும் எளிதில் அகற்ற கூடிய சாலையோர வியாபாரிகளை அகற்றும் அதிகாரிகளும், போலீசாரும் நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான சாலையோர இடத்தில் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ள கடைகளின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
கைவிட வேண்டும்
எனவே அன்றாட வயிற்று பிழைப்புக்காக சாலையோரத்தில் வைத்துள்ள கடைகளை அகற்றும் பணியை கைவிட வேண்டும். அல்லது முதலில் சாலையோரத்தில் கட்டிடங்களை கட்டி லட்சகணக்கில் சம்பாதித்து கோடீஸ்வரர்களாகி யுள்ளவர்களின் கடைகளை முதலில் அகற்ற வேண்டும்.
மாறாக அராஜகமான நடவடிக்கையை அரசு தொடர்ந்தால் சமூக ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.