search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமலோற்பவம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
    X

    அமலோற்பவம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்த காட்சி.

    அமலோற்பவம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    • அமலோற்பவம் மேல்நிலை பள்ளியில் இருந்து 455 படைப்புகளும், லூர்து அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளி 336 படைப்புகள் இடம் பெற்றன.
    • கலை, அறிவியல், திறன் கல்வி ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறந்த 8 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டினர்.

    புச்சேரி:

    புதுவை அமலோற்பவம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற கண்காட்சி அமலோற்பவம் ஆரம்ப பள்ளி வளாகத்திலும், கொம்பாக்கம் அமலோற்பவம் லூர்து அகாதெமி வளாகத்திலும் நடைபெற்றது.

    இதில் அமலோற்பவம் மேல்நிலை பள்ளியில் இருந்து 455 படைப்புகளும், லூர்து அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளி 336 படைப்புகள் இடம் பெற்றன. கண்காட்சியை பள்ளி முதுநிலை முதல்வர் லூர்துசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    அறிவியல் படைப்புகள் பண்ணை வளர்ப்பு திட்டம், ஆட்டோமெட்டிக் தெருவிளக்கு, சென்சார் உதவியோடு குப்பைகளை சுத்தப்படுத்துதல், மழைக்காலங்களில் வீட்டுக்குள் நீர் புகாமல் மிதக்கும் வீடுகளாக அமைக்கும் தொழில்நுட்பம், காகித அட்டைகளை கொண்ட ரோபோடிக் வாக்கும் கிளீனர் உள்பட பல இருந்தன.

    புதுவையில் வேறெந்த பள்ளியில் இல்லாத வகையில் மாணவர்களின் பன்முக திறமையை வளர்க்கும் திறன்சார் கல்வி படைப்புகளும் இருந்தது. 9 மணி முதல் 5 மணி வரை நடந்த கண்காட்சியை பொதுமக்கள், பெற்றோர்கள் பலர் கண்டுகளித்தனர்.

    இதில், கலை, அறிவியல், திறன் கல்வி ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறந்த 8 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டினர்.

    இதில் சிறந்த வெற்றியாளராக தேர்வாகுவோருக்கு விரைவில் வெள்ளி பதக்கங்கள் வழங்கபடவுள்ளது.

    Next Story
    ×