search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 வழி சிமெண்டு சாலையால் அனல் பறக்கும் வெப்பம்
    X

    கெங்கராம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வழி சிமெண்டு சாலை.

    4 வழி சிமெண்டு சாலையால் அனல் பறக்கும் வெப்பம்

    • மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் போது அனல் காற்றுடன் தூசி பறக்கிறது.
    • இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் - விழுப்புரம் 4 வழி சாலையில் எம்.என். குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 17 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டு வருகின்றது. இந்த புதிய சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் போது அனல் காற்றுடன் தூசி பறக்கிறது.

    சாலை கட்டமைப்பு மேம்படு த்தப்பட்டு வரும் நிலையில், சாலையின் 2 புறமும் மரங்கள் இல்லாததால், அனல் வீசும் சாலையாக மாறி வருகின்றது.

    இதனால் அவ்வழியாக பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தி ற்கு உள்ளாகிவருகின்றனர். கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதி, திருவண்டார் கோவில் பஸ் நிறுத்த பகுதி, திருபுவனை 4 முனை சந்திப்பு, மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பு பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் ஒரு வழி பாதையில் செல்கிறது.

    இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைக்காக ஏற்படுத்தப்படும் திடீர் பள்ளங்களால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மரண பயத்தில் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

    Next Story
    ×