என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பாலமுருகன் கோவிலுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
- திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.
- ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த கிராம பொதுக்கூட்டத்தில் பாலமுருகன் கோவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஏப்ரல் 5-ந் தேதி நடை பெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாவற்குளம் பாலமுருகன் கோவிலில் கிராம பொதுக்கூட்டம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த கிராம பொதுக்கூட்டத்தில் பாலமுருகன் கோவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கவுரவத் தலைவர் ரத்தினம், தலைவர் சொக்கலிங்கம், துணைத் தலைவர் பாண்டியன், பொருளாளர் கலியன், துணைப் பொருளாளர் பாஸ்கரன், செயலாளர்கள் முருகன், சீனிவாசன், பழனி, குமார், வினோத், துணைச் செயலாளர் பாபு,
கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜானகி ராமன், நாராயணன், ராஜா, மணி, கோபால், நவநீத், சாரதி, சுந்தர், சிவப்பிர காசம், ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகி களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். புதிய கோவில் நிர்வாகிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார்.