search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரிச்சுவடி மனநல மையத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்தநாள் விழா
    X

    சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு டாக்டர் இளவழகன் நினைவு பரிசு வழங்கிய காட்சி.

    அரிச்சுவடி மனநல மையத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்தநாள் விழா

    • விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கேக் வெட்டி மையத்தில் உள்ள மன நோயாளிகளுக்கு வழங்கினார்.
    • டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் அமைந்துள்ள அரிச்சுவடி மனநல மையத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கேக் வெட்டி மையத்தில் உள்ள மன நோயாளிகளுக்கு வழங்கினார்.

    முன்னதாக விழாவில் பங்கேற்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி பழக்கூடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பா.ஜனதா செயலாளர் கலைவாணன், தனுசு, தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×