search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சபாநாயகர் பொய்யான தகவல்களை சொல்கிறார்
    X

    கோப்பு படம்.

    சபாநாயகர் பொய்யான தகவல்களை சொல்கிறார்

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
    • மாகி மருத்துவத்துறை முனைப்புடன் செயல்பட்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தட்டாஞ்சாவடி பகுதியில் நில ஆர்ஜிதம் பற்றி விபரம் தெரியாமல் பேசுகிறார். ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் முதல்-அமைச்சராக இருந்தபோது, அந்த இடம் கையகப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டது. ரூ.80 லட்சம் மாநில அரசு டெபாசிட் கட்டியது.

    அந்த நோட்டீஸ் அனுப்பியதோடு சரி. 4 ஆண்டு எந்த நடவடிக்கையும் ரங்கசாமி அரசு எடுக்க வில்லை. வருவாய்த்துறை நில ஆர்ஜிதத்தை ரத்து செய்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வைத்திலிங்கம் முதல்- அமைச்சராக இருந்தபோது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது என பொய்யான தகவலை கூறுகிறார்.

    நில உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டூ உத்தரவுப்படி நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. சபாநாயகர் செல்வம் தனது புகாரை நிரூபிக்க வேண்டும். அவர் சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் முதலில் ரங்கசாமிதான் மாட்டுவார். இதற்கு ரங்கசாமி பதில்கூற வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சபாநாயகர் செல்வம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    புதுவையில் டெங்கு அதிகமாக பரவி வருகிறது. புதுவை அரசு முன்னெ ச்சரிக்கை எடுக்காத தால் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். அரசு மெத்தனத்தாலும், சுகாதார த்துறை காலம்கடந்த நடவடிக்கையாலும் இந்த பலி ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதித்த பின் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்கிறோம், கொசு மருந்து தெளிக்கிறோம் என்கிறார்கள். முன்னெச்சரிக்கையோடு ஏன் இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை?

    நிபா வைரசால் கேரளாவில் 5 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். மாகி முன்னள் அமைச்சர் வல்சராஜ், எம்.எல்.ஏ. ரமேஷ்பரம்பத் ஆகியோரை தொடர்புகொண்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

    கோழிக்கோடு நகரம் புதுவையின் மாகி பகுதிக்கு அருகில் உள்ளது. நிபா வைரஸ் கொரோனாவை விட கொடியது. மாகி மருத்துவத்துறை முனைப்புடன் செயல்பட்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் மாமூல் கேட்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன், மாமூல் வசூலிக்கும் கூட்டமும் வெளியே வந்துவிடும். கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ், தி.மு.க., என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மாமூல் கேட்கும் கூட்டம் சட்டசபையை சுற்றி வருகிறது. கட்ட பஞ்சாயத்து செய்கின்றனர்.

    முதல்-அமைச்சர், சபாநாயகர் அந்த கூட்டத்தை சட்டசபைக்குள் நுழைய விடக்கூடாது என கூறியுள்ளனர்.

    இதைத்தான் நான் தொடர்ந்து புகார் கூறி வருகிறேன். அவர்களின் வேலையே மாமூல் வசூலி ப்பதுதான். இவர்கள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். புதுவையில் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழும் கூட்டம் அதிகமாக உள்ளது. காவல்துறைக்கு மாமூல் மாதந்தோறும் சரியாக செல்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×