search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விளையாட்டு வீரர் நலச்சங்கத்தினர் முற்றுகை போராட்டம்  நடத்த முடிவு
    X

    ஆலோசனைக்கூட்டத்தில் கராத்தே வளவன் பேசிய காட்சி.

    விளையாட்டு வீரர் நலச்சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு

    • விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பிரகதீஷ், கோடீஸ்வரன், பால ஜனகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம்சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் முத்து கேசவலு, கோவிந்தராஜ், பாலுசாமி, ராமமூர்த்தி, தினேஷ், பிரகதீஷ், கோடீஸ்வரன், பால ஜனகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் நிர்வாகிகள் வீர.பாரதி, ராமச்சந்திரன், ஜனா,சுப்பிரமணி, ஆறுமுகம், அசோக், சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் மாநிலத்தில் விளையாட்டு துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் நிலை குறித்து முழுவதும் விவாதிக்கப்பட்டது.

    விளையாட்டுக்கு தனி துறை ஏற்படுத்துவது, விளையாட்டு கவுன்சிலை தொடர்ந்து நடத்த அரசு ஏற்பாடு செய்ய வற்புறுத்துவது, தொகுதி வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்துவது வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல வருடங்களாக கணக்கு தாக்கல் செய்யாமல் பணம் செலவு செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விளையாட்டு கவுன்சில் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது, செய்த தவறுகளை மறைப்பதற்காக புதிதாக சட்ட விரோதமாக புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் ஏற்படுத்தியதை பலமுறை சுட்டிக்காட்டியும் இதுவரை கலைக்காமல் இருப்பது, சென்டாக் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தகுதி இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு விளையாட்டு வீரர்களின் சான்றிதழை சரி பார்ப்பது, விளையாட்டு வீரர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்காதது இதுபோன்று தொடர்ந்து விளையாட்டு வீரர்களை அலட்சியம் செய்து வரும் புதுவை அரசையும், கல்வித்துறையும் கண்டித்து விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    முன்னதாக சதீஷ் வரவேற்றார் முடிவில் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×