என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுவையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை
- புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- அரசு சார்பில் திட்டம் தயாரித்து அனுப்ப வேண்டும்
புதுச்சேரி:
புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மத்திய அரசின் பிரதான் மந்திரி மித்ரா திட்ட அறிவிப்பை பயன்படுத்தி, புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று புதுவை சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் நமச்சிவாயத்தை சட்டசபையில் உள்ள அவரின் அலுவலகத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், புதுவை பஞ்சாலை சங்கத்தின் தலைவர் அபிஷேகம், செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் முனிசாமி, துனைச்செய லாளர் ஏழுமலை, நிர்வாக குழு உறுப்பினர் ஜெயசதீஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அப்போது அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான திட்டம் உள்ளது. கடந்த மாதம் மத்திய ஜவுளித்துறை அதிகாரிகளின் குழு புதுவைக்கு வந்து பார்வை யிட்டு சென்றுள்ளது. ஜவுளிப்பூங்கா புதுவையில் அமைக்க அரசு சார்பில் திட்டம் தயாரித்து அனுப்ப வேண்டும். அதை விரைவாக செய்கிறோம் என தெரிவித்தார்.