search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் -  ஆசிரியர்களுக்கு கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள்
    X

    ஆலோசனை கூட்டத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள்

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி பொதுமக்களை நேரில் சென்று சந் தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்து கேட்கலாம் என்று தெரிவித்தார்.
    • காமராஜர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி வீரக்குமார் ஆகியோரை வரவைத்து சிறப்பு ஆலாசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரபேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் குறைவாக உள்ளதால் வகுப்புகளை கலைத்து அருகாமையில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை மாற்றம் செய்ய கல்வித்துறை முயற்சித்தது.

    இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கெ ன்னடியை சந் தித்து கல்வித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார். அதில் நாட்டம் இல்லாத அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி பொதுமக்களை நேரில் சென்று சந் தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்து கேட்கலாம் என்று தெரிவித்தார். பின்னர் கல்வித்துறை துணை இயக்குனர் நடன சபாபதி, காமராஜர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி வீரக்குமார் ஆகியோரை வரவைத்து சிறப்பு ஆலாசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் அனைவரும் பள்ளி இங்கேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கூறுகையில், ''பள்ளி மாணவர்களை இடம் மாற்றம் செய்வதற்கு பதிலாக பள்ளியில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தி தரமான கல்வி கொடுக்க வேண்டும், காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளி இதே இடத்தில் இங்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டி ருக்க வேண்டும'' என தெரிவித் தார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, காலப்பன், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×