search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா போட்டி?
    X

    பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா போட்டி?

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
    • நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் மீண்டும் போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ளது.

    இந்த நிலையில் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது.

    புதுவை மாநிலத்திலும் பா.ஜனதா கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அவர்கள் பல்வேறு கூட்டங்கள் நடத்தி பிரதமர் மோடியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

    இதற்கிடைய கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணியில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மேல்சபை எம்.பி. பதவியை பா.ஜனதாவிற்கு விட்டுக்கொடுத்தது.

    எனவே நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் மீண்டும் போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த நிலையில் மத்திய மந்திரியும் பா.ஜனதா புதுவை மாநில பொறுப்பாளருமான எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுச்சேரி வந்தார். அவர் பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி தொகுதியில் போட்டி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்றும், தொகுதி வாரியாக பூத் கமிட்டியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா கட்சி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    Next Story
    ×