search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு தற்காலிக ஏற்பாடுதான்
    X

    கோப்பு படம்.

    ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு தற்காலிக ஏற்பாடுதான்

    • அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
    • பல்வேறு இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒய்வு பெற்ற ஆசிரியர் களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். படித்த இளைஞர்கள் பலர் இருக்க ஒய்வு பெற்றோருக்கு வாய்ப்பு அளிப்பதா.? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதுகுறித்து கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஓய்வுபெற்ற ஆசிரி யர்களை நியமிப்பதற்கு எதிரான விமர்சனங்கள் உண்மைகளை அறியாமல் எழுப்பப்படுகின்றன. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட பல்வேறு ஆசிரியர் பணியி டங்களை நிரப்ப நிதித் துறை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    எனவே பணியிடங்களை நிரப்ப 3 முதல் 4 மாதங்கள் ஆகும். பிப்ரவரி மாதத்திற்குள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும்.

    ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதால், தற்போதுள்ள ஆசிரியர்களில் சிலர் அதிக சுமையால், தினமும் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு சென்று பாடத்திட்டத்தை முடிக்க வேண்டியுள்ளது.

    ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, இடைக்கால ஏற்பாட்டிற்குப் பிறகு அவர்களது சேவை நிறுத்தப்படும். சுமார் 340 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 67 விரிவுரையாளர்களை பணியமர்த்த கோப்பு விரைவில் வெளியிடப்படும். அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலி பணியி டங்களையும் காலக் கெடுவு டன் நிரப்புவோம். ஒரே பிரச்சனை என்னவென்றால், ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நேரம். ஆட்சேர்ப்பு விதிகளைப் பின்பற்றி, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிப்பதன் மூலம் இது வெளிப்படை த்தன்மையு டன் செய்யப்பட வேண்டும்.

    அநேகமாக இந்த கல்வி யாண்டின் இறுதிக்குள், பெரும்பாலான காலியி டங்கள் நிரப்பப்படும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை காலி இடத்தில் நியமிப்பதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வயது முதிர்ந்த பட்டதாரிகளை நியமித்தால் 3 அல்லது 4 மாதங்களுக்குப் பிறகு அத்தகைய பட்டதா ரிகளின் சேவை களை நிறுத்துவது பணி நியமனத்துக்கு தடைகளை உரு வாக்கும். ஓய்வு பெற்ற ஆசிரி யர்க ளின நியமனம் மற்றும் பணி நீக்கத்தை நிர்வ கிப்பது எங்களுக்கு எளிதானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×