search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாகி பிராந்திய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும்
    X

    கோப்பு படம்.

    மாகி பிராந்திய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும்

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி
    • விடுதலை நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள், நன்றி செலுத்தும் நாள்.

    புதுச்சேரி:

    மாகி பிராந்தியத்தில் புதுவை விடுதலை நாளை யொட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள், நன்றி செலுத்தும் நாள். ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி நமது சுதந்திர போராட்டத்தின் போது முன்னோர்கள் செய்த மாபெரும் தியாகங்கள் நம்மை நினைவுகூறச் செய்கிறது.

    காலனி ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்த விடுதலை நாளில் தலை வணங்குவதைப் பெருமை யாக கருதுகிறேன். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் புதுவை மாநிலத்தில் சிறப்பான சாதனைகள், வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு புதுவை மக்களின் குறிப்பாக மாகி மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

    ஒரே சமுதாயம், ஒரே கனவு, ஒரே தீர்மானம், ஒரே திசை மற்றும் ஒரே இலக்கை உருவாக்குவதே நம்முடைய குறிக்கோள் ஆகும். மாகி மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வரும் காலங்களிலும் மாகி பகுதிக்கு தேவையான மற்றும் சாத்தியமான அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்க ளையும் முன்னெடுத்து மாகியை அனைத்து வகையிலும் மேம்பட்ட வட்டாரப் பகுதியாக மாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×