என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய புதுவை காங்கிரசார்
- அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் நீக்கியது.
- எனது வீடு, ராகுல்காந்தியின் வீடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை நாடு முழுவதும் காங்கிரசார் தங்கள் வீடுகளில் ஒட்டி வருகின்றனர்.
புதுச்சேரி:
அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் நீக்கியது.
அதோடு டெல்லியில் ராகுல் வசித்த வீட்டை காலி செய்யும்படி பாராளுமன்ற செயலகம் உத்தரவிட்டது. ராகுல்காந்திக்காக பலரும் தங்கள் வீட்டை தர முன்வந்துள்ளனர். எனது வீடு, ராகுல்காந்தியின் வீடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை நாடு முழுவதும் காங்கிரசார் தங்கள் வீடுகளில் ஒட்டி வருகின்றனர்.
புதுவையில் முதல் வீடாக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தனது இல்லத்தில் இந்த ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு ஸ்டிக்கர் ஒட்டினார். நிகழ்ச்சியில் வக்கீல் அணி மருதுபாண்டியன், பொதுச்செயலாளர் திருமுருகன், வட்டார தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளிலும் இளைஞர் காங்கிரசார் ஸ்டிக்கர் ஒட்டினர்.