search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருவண்டார் கோவில் வரை புறவழிச்சாலைகள் சீரமைப்பு பணி தொடக்கம்
    X

    புறவழிச்சாலைகள் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    திருவண்டார் கோவில் வரை புறவழிச்சாலைகள் சீரமைப்பு பணி தொடக்கம்

    • கழிவு நீர் வாய்க்கால் குறுக்கே இருப்பதால் நேரடியாக நெடுஞ்சாலைக்கு செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
    • விரிவாக்க பணி திட்ட மேலாளர் குமார் ஆகியோரை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேரில் வர வழைத்து அங்காளன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதகடிப்பட்டியில் இருந்து திருவண்டார்கோவில் வரை உள்ள பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கட்டப்பட்டு பின்னர் 4 வழி சாலை போடப்படுகிறது.

    இந்த உட்புற சாலையிலிருந்து 4 வழி சாலைக்கு பொதுமக்கள் வாகனத்தில் வரும் பொழுது கழிவு நீர் வாய்க்கால் குறுக்கே இருப்பதால் நேரடியாக நெடுஞ்சாலைக்கு செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் முறையிட்டனர். இதனை யடுத்து அங்காளன் எம்.எல்.ஏ. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

    மதகடிப்பட்டியில் இருந்து திருவண்டார்கோ வில் வரை உள்ள பகுதியில் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் திட்ட இயக்குனர் சக்திவேல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி திட்ட மேலாளர் குமார் ஆகியோரை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேரில் வர வழைத்து அங்காளன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று மதகடிப்பட்டில் இருந்து திருவண்டார் கோவில் பகுதி வரை உள்ள உட்புற சாலைகளை சீரமைப்பது குறித்து பொறியாளர் பாஸ்கர் மற்றும் திட்ட மேலாளர் குமார் ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இப்பணிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும் என்று திட்ட மேலாளர் குமார் உத்தர வாதம் அளித்துள்ளார்.

    Next Story
    ×