search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தென்பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ள அபாயம்
    X

    தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சொர்ணாவூர் அணை நிரம்பி வழிந்தது.


    தென்பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ள அபாயம்

    • சொர்ணாவூர் அணை நிரம்பி வழிகிறது
    • பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    புதுச்சேரி

    புதுச்சேரி, தமிழகம் கர்நாடகா மாநிலங்களில் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகா பகுதியில் உள்ள அணை திறக்கப்பட்டு அங்கு இருந்த உபரி நீர் சாத்தனூர் அணையை வந்தடைந்தது.

    சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 3500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் தற்போது தென்பெண்ணையாற்றில் பாய்ந்தோடி வருகிறது. இதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றின் வழியாக வரும் நீர் புதுச்சேரி பொதுப்பணித்துறை கீழ் பராமரித்து வரும் சொர்ணாவூர் அணையை இன்று காலை எட்டியது.

    தற்பொழுது இந்த ஆற்றில் 1.30 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் இருபுறம் கரைபுரண்டு வந்து கொண்டு இருக்கிறது. தண்ணீர் அதிகமாக வருவதால் சொர்ணாவூர் அணை நிரம்பி தண்ணீர் வழிகிறது. மேலும் இந்த அணையில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு 1.10 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வருகிறது.

    கடந்த சில நாட்களாக பாகூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாய்க்கால், நிலம் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஏற்கனவே சாத்தனூர் அணை திறக்கப்பட்டு அணைகள் நிரம்பிய நிலையில் மீண்டும் அதிகப்படியாக தண்ணீர் வருவதால் அரசு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.


    புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆற்றில் வரும் தண்ணீரின் அளவையும் வாய்க்காலில் மூலமாக ஏரிகளை நிரப்பி வருவதையும் பணியையும் கவனித்து வருகின்றனர். கடந்த மாதம் இதே போல அணைகள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×