search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
    X

     சூரசம்ஹாரத்தையொட்டி புதுவை கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் இன்று வள்ளி, தெய்வானை-முருகர் சமேத திருகல்யாண உற்சவம் நடந்தது

    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    • கவுசிக பாலசுப்பிரமணியர், தெய்வானை, வள்ளியை மணமுடிக்க மாப்பிள்ளை கோலத்தில் எழுந்தருளினார்.
    • முத்தியால் பேட்டை சிவ சுப்ரமணிய சாமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருகர்கோ வில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள பிரசித்திபெற்ற கவுசிக பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 71-ம் ஆண்டு சூரசம்ஹார திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    தொடர்ந்து 16-ந் தேதி காலை யானை முகன் சூரன் புறப்பாடும், அன்றிரவு யானை முகன் சம்ஹாரம் நடைபெற்றது. நேற்று காலை திருத்தேர் உற்சவமும் அதனை தொடர்ந்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

    இன்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கவுசிக பாலசுப்பிரமணியர், தெய்வானை, வள்ளியை மணமுடிக்க மாப்பிள்ளை கோலத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து நலுங்கு, ஊஞ்சல், மாப்பிள்ளை அழைப்பு ஆகியவை நடைபெற்று திருக்கல்யாணம் நடந்தது.

    ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பெண்களுக்கு மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆலய பரிபாலகர் கவுஸ்காதர், ஆலய அர்ச்சகர்கள் ஞானசேகர், ராஜேஷ்குமார் மற்றும் விழாகுழுவினர் செய்தனர்.

    இதுபோல் புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற லாஸ்பேட்டை, முத்தியால் பேட்டை சிவ சுப்ரமணிய சாமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருகர்கோ வில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    Next Story
    ×