search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா
    X

    கோப்பு படம்.

    வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

    • இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் மற்றும் அறங்காவல் வாரிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை காந்திமதி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கி ஜூன் 9-ந் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றம் நடந்தது. இதனை தொடர்து நாள்தோறும் காலை 10:30 மணிக்கு திருமணஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. 31-ந் தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், ஜூன் 2-ந் தேதி வெண்ணை தாலி திருக்கோலமும் நடைபெறும்

    மறுநாள் 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 4-ந் தேதி காலை 10 மணிக்கு 108 கலச திருமஞ்சனமும், மறுநாள் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. 9-ந் தேதி மாலை 5 மணிக்கு பானக பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் மற்றும் அறங்காவல் வாரிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×