search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில்  தேர் திருவிழா
    X

    புதுவை வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா தொடங்கியது. இதையொட்டி கோவிலில் இன்று கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான செங்கழுநீர் அம்மன் கோவில் அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடி யேற்றமும் நடந்தது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பஞ்சமுக மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத் தலைவர் உதயசங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இருசப்பன், உறுப்பினர் முத்துவேல், விழா குழுவினர், மக்கள் குழுவினர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×