search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
    X

    மதகடிப்பட்டு-திருக்கனூர் சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள காட்சி.

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

    • தினந்தோறும் வாகன ஓட்டிகள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.
    • போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் ஊர்ந்தே செல்கின்றன.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இதில் மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் சாலை விரிவாக்க பணிக்கு முன்பு சாலை ஓரங்களில் பஸ்கள் செல்லும் சாலை ஓரத்திலேயே நடைபாதை வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர்.

    தற்பொழுது 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் சாலை ஓரங்களில் இருந்த அனைத்து கடைகளும் மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலையில் இரு புறங்களிலும் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த வழியாகவே பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பிப்டிக் தொழிற்பேட்டைக்கு செல்லும் பெண்கள் -ஆண்கள் என அனைவரும் 2 சக்கர வாகனம் 4 சக்கர வாகனங்களில் சென்று வர வேண்டும்.

    தற்பொழுது இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் காலை 8 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் ஊர்ந்தே செல்கின்றன.

    இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்தும் ஏற்படுகிறது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் திருபுவனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் அது தங்கள் வேலை அல்ல? போக்குவரத்து போலீசாரின் வேலை என்று தட்டிக்கழிக்கின்றனர்.

    இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இருபுறங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி சீரான போக்குவரத்து நடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×