search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.1.07 கோடி செலவில் நலத்திட்ட பணிகள்
    X

    நலத்திட்ட பணிகளை செந்தில் குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.1.07 கோடி செலவில் நலத்திட்ட பணிகள்

    • மதி கிருஷ்ணா புரத்திலிருந்து உச்சிமேடு வரை சாலை அமைக்க ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • புது தெருவில் சாலை அமைக்க ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க பாகூர் திருமூலநாதர் நகரில் ரூ.18 லட்சத்து 12 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கவும், மதிகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் முதல் பள்ளக்ககொரவள்ளிமேடு வரை சாலை அமைக்க ரூ. 7 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும், மதி கிருஷ்ணா புரத்திலிருந்து உச்சிமேடு வரை சாலை அமைக்க ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கமலா நேரு திருமண மண்டபத்திற்கு வாகனம் நிறுத்தம் அமைக்க ரூ. 7 லட்சத்து 58 ஆயிரம் செலவிலும், பாகூர்பேட் புது நகரில் கோனா மதகு வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.19 லட்சத்து 77 ஆயிரம் செலவிலும், காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். நகர், மாரியம்மன் கோவில் வீதியில் சாலை அமைக்க ரூ.23 லட்சத்து 7 ஆயிரம் செலவிலும், கொரவள்ளிமேடு வடக்குத்தெரு வண்ணாகுளம் புது தெருவில் சாலை அமைக்க ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதியிலிருந்து குருவிநத்தம் பெரியார் நகர் குடிநீர் தொட்டியை ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்திற்கு புதுப்பித்தல் பணிக்கு திட்டமிடப்பட்டது. திட்டப்பணிகான மொத்த மதிப்பு ரூ.1கோடியே 7லட்சமாகும். இதற்கான பணிகளை தொடங்க பூமி பூஜை அந்தந்த கிராமங்களில் கடந்த 2 நாட்களாக நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பிரதீப், புனிதவதி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×