என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ரஷ்யா
- விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த பேருந்தில் மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர். இதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து 12 பேரை அவசர உதவியாளர்கள் மீட்டுள்ளனர். மீட்பு பணி முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கிய வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.
- இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம்.
இந்திய பாராளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பத்திரிகையாளர் சந்தித்து பேசினார்.
அப்போது, "காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.
இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில் மத நம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா உட்பட 16 நாடுகள் ஈடுபடுவதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
- ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் சென்ற வாகனங்கள் மீது டிரோன் தாக்குதல்.
- இரண்டு குழந்தைகள் லேசாக காயத்துடன் உயிர் தப்பினர்.
ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றன.
இன்று காலை உக்ரைன் ரஷியாவுடனான எல்லையில் உள்ள பெல்கோரோட் மகாணத்தில் உள்ள பகுதி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது என அந்த மாகாண கவர்னர் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
பெல்கோரோட் மாகாணத்தில் உள்ள பொரிசோவ்ஸ்கி மாவட்டம் பெரேசோவ்கா கிராமம் அருகே ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் இரு வாகனங்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அருகே கார் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. அதன்மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்கியது.
இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின. ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
- போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது.
- இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
மாஸ்கோ:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் மூலம் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.
இதற்கிடையே போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் வக்கீலுக்கும் ரஷியா கைது வாரண்டு பிறப்பித்தது.
இந்தநிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் தரைப்படைத் தளபதி ஒலெக்சாண்டர் பாவ்லியுக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
மேலும் போரில் உக்ரைனுக்கு உதவியதற்காக எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாசையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்த பட்டியலில் உள்ளவர்கள் ரஷியாவில் நுழைந்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
ஆனால் இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. மேலும் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்டு மட்டுமே உண்மையானது மற்றும் 123 நாடுகளில் செயல்படுத்தக்கூடியது என்பதை நினைவூட்டுவதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
சர்வதேச நீதிமன்றத்தால் ஏற்கனவே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது.
- சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
மாஸ்கோ:
பாகிஸ்தானில் இருந்து ரஷியாவுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் டன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது. இது ரஷியாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பாகிஸ்தான் தூதரை அழைத்து இது தொடர்பாக கடும் ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் இதேநிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
- இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.
முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.
குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.
மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.
உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது கோர்ட்டு குற்றஞ்சாட்டியது.
- சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மாஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது.
மாஸ்கோ:
ரஷியாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ கோர்ட்டு அறிவுறுத்தியது.
இதனை நீக்க மறுத்தநிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது கோர்ட்டு குற்றஞ்சாட்டியது.
இந்தநிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.407 கோடி (49 மில்லியன் டாலர்) அபராதம் விதித்து மாஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது.
- மேற்கத்திய துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதை புறந்தள்ளி விட முடியாது- மேக்ரான்
- பிரான்ஸ் முடிவு தனக்குத்தானே பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதாகும்- ரஷிய மந்திரி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகின்றன. ஆயுதங்கள் கொடுத்து பக்கபலமாக இருந்து வருகின்றன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதை புறந்தள்ளி விட முடியாது என தெரிவித்திருந்தார். இதன்மூலம் தேவைப்பட்டால் பிரான்ஸ் உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்கெய் சோய்கு, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி செபஸ்டியன் லெகோர்னு உடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.
அப்போது செர்கெய் "பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஏற்கனவே அறிவித்தபடி, பிரான்ஸ் அதை பின்பற்றினால், அது பிரான்ஸ் தனக்குத்தானே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வதாகும்" என செபஸ்டியன் லெகோர்னுவிடம் எச்சரித்துள்ளார்.
மேலும், "உக்ரைன் மேற்கத்திய நாடுகளில் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை. பிரான்ஸ் சிறப்பு துறைககள் ஈடுபடாது என நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷியா உடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ள நிலையில் ரஷிய பாதுகாப்பு மந்திரி அரிதாக பிரான்ஸ் மந்திரியுடன் பேசியுள்ளார்.
2022 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு மந்திரிகளும் முதன்முறையாக தற்போது பேசியுள்ளனர்.
- இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 பேர் பலியானார்கள்.
- ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம்.
இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பரதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன" என்றார்.
- நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
- 4 பேரையும் வருகிற மே மாதம் 22-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாஸ்கோ:
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் மிகப்பெரிய இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு சென்றிருந்த 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 152-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற டாலர்சோன் மிர்சோயேவ் (வயது 32), சைதாக்ரமி (30), சம்சுதீன் பரிதுனி (25) மற்றும் முகமது சோபிர் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இருவர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த 4 பேரையும் வருகிற மே மாதம் 22-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.
மாஸ்கோ:
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.
உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
- அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
- கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது, அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.
இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
முதற்கட்டமாக, இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.
60 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.
இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் கார் துரத்தலை தொடர்ந்து, கொடிய தாக்குதலை நடத்திய நான்கு பயங்கரவாதிகள் உட்பட 11 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நான்கு துப்பாக்கி ஏந்தியவர்கள் உட்பட, இந்த கொடிய தாக்குதலை நடத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்