என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சுவிட்சர்லாந்து
- டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா.
- அவரது தொடர் வெற்றி, இந்திய தடகளத்துறை மேம்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
சுரிட்ச்:
சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச் சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.
இதன் மூலம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார். இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையும் நீரஜ் சோப்ராவிற்கு கிடைத்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ராவை பிரதமர் பாராட்டியுள்ளார். டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா கோப்பையை வென்றதன் மூலம் இந்த தொடர் வரலாற்றில் இந்தியர் ஒருவர் முதல் முறையாக சாதனையை படைத்திருக்கிறார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்று வரலாறு படைத்த முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள், அவர் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.
அவரது தொடர் வெற்றிகள் இந்திய தடகளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு செயல்களை வெளிக் காட்டுகின்றன. இவ்வாறு பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேபோல் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர், இது அவரது வெற்றி மகுடத்தில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு இறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் பங்கேற்கவில்லை.
- சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடர் பைனல் போட்டி நடந்தது.
சூரிச்:
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.
- இந்தாண்டு 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
ஜெனீவா:
கொரோனா வைரஸ் தொற்று உருவாகி இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும், அந்த வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வைத்திருக்கிறோம். தற்போது இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
- காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை.
- சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
லாசேன்:
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
அவர் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், செப்டம்பர் 7ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும் டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.
- இந்தியாவில் கொரோனா தனது கடைசிக்கட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறதா என்று கேட்கிற சூழல் வந்துள்ளது.
- கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்புச்சக்தி பெரும்பாலான மக்களுக்கு வந்திருக்கிறது.
ஜெனீவா :
கொரோனா- உலகம் அறிந்த பெயராகி இருக்கிறது, இந்த வைரஸ்.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளையெல்லாம் வாட்டி வதைத்திருக்கிறது.
ஏறத்தாழ 2½ ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பூமிப்பந்தை, பந்தாடிய கொரோனா வைரஸ், இப்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறதா என்று கேட்கிற நிலைக்கு வந்து இருக்கிறது.
இந்தியாவிலும் கொரோனா தனது கடைசிக்கட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறதா என்று கேட்கிற சூழல் வந்துள்ளது.
ஏறத்தாழ 140 கோடி மக்கள் வாழ்கிற இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒரு நாளில் 15 ஆயிரத்து 754 பேருக்குத்தான் தொற்று என்பது பாதிப்பே இல்லை என்றே கூறலாம். கர்நாடகம், மராட்டியம், டெல்லி, கேரளா என 4 மாநிலங்களில்தான் தொற்று 4 இலக்க எண்ணிக்கையில் இருக்கிறது. எனவே பயப்பட ஒன்றுமில்லை என கூறுகிற நிலை வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்புச்சக்தி பெரும்பாலான மக்களுக்கு வந்திருக்கிறது. இதனால் தொற்று வந்தாலும் 2 அல்லது 3 நாட்கள் ஜலதோஷம் போல போய்விடுகிற சூழலைப் பார்க்க முடிகிறது. ஆஸ்பத்திரி சேர்க்கையும், தீவிர தாக்குதலும் அபூர்வமாகத்தான் இருக்கிறது.
இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இருக்கிறது.
இதற்கு அஸ்திவாரம் அமைத்துத் தந்த பெருமை கொரோனா தடுப்பூசிகளுக்கு உண்டு. உலகளவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டு விட்டார்கள்.
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் 67 சதவீத மக்கள் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். சீனாவில் 89 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு விட்டனர். ஆனாலும் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இன்னும் பல இடங்களில் தொடர்கின்றன என்பது வேறுகதை.
சீனாவில் 'ஜீரோ கோவிட்' கொள்கையை பின்பற்றுகிறார்கள். இந்தக் கொள்கை, 15 லட்சம் இறப்புகளை அங்கு தவிர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று கூறுகிற நிலை வர வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதனால்தான் அங்கு ஆங்காங்கே இன்னும் பொது முடக்கம், தீவிர கொரோனா பரிசோதனைகள் நீடிக்கின்றன.
கொரோனாவால் உலகளவில் பெரும்இழப்பினை சந்தித்த அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதித்த ஒருவருடன் வெளிப்பட்டால்கூட, பாதிப்போ, அறிகுறிகளோ தனக்கு நேராதவரையில், தடுப்பூசி போட்டவர்களும் சரி, போடாதவர்களும் சரி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத்தேவையில்லை என்று சி.டி.சி. என்று சொல்லப்படுகிற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி விட்டது.
அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கூட 10 நாட்களுக்கு உயர் தரமான முககவசத்தை முறையாக அணிந்து, 5-வது நாளில் பரிசோதனை செய்தால் போதும் என சொல்லப்பட்டு விட்டது.
கொரோனா நோயாளிகள் 5 நாட்கள் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தினால் போதும். அறிகுறிகள் போன பின்னே வீட்டிலும் சரி வெளியே பொது இடங்களிலும் சரி உயர் தர முககவசம் அணிந்து வந்தால் போதும் என கூறப்பட்டுள்ளது.
சி.டி.சி.யின் சமீபத்திய அறிவுரை குறிப்பு, கொரோனா முற்றிலுமாய் முடிவுக்கு வந்து விடாவிட்டாலும்கூட, நாடு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு துணை நிற்கிறது. கொரோனா நமது அன்றாட வாழ்வில் இப்போது பெரிதான இடையூறு செய்வதில்லை என்று கூறி உள்ளது.
2020-ம் ஆண்டு கொரோனா தீவிரமாக பரவத்தொடங்கியபோது, பதறிக்கொண்டே கட்டுப்பாடுகளை விதித்த நாடுகள் இப்போது அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டிருக்கின்றன என்பது உண்மை.
உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனம் மெக்கின்சி கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பாவும், அமெரிக்காவும் கொரோனா தொற்றைப் பொறுத்தமட்டில் உள்ளூர் தொற்று என்ற அளவுக்கு வந்து விட்டன, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புகள் மிகவும் குறைவுதான் என்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் என்ற நடவடிக்கையில் இருந்து உள்ளூர் தொற்று நிர்வகித்தல் என்ற கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
மொத்தத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பெரும்பாலான நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
எனவே கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி உரக்க ஒலிக்கிறது என்பதே பொதுச் சுகாதார நிபுணர்களின் பார்வையாக இருக்கிறது.
- உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
- ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
ஜெனீவா:
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.
உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
- நிதி நெருக்கடிக்கு அரசு தீர்வு காணத் தவறியதையடுத்து இலங்கையில் மக்கள் போராட்டம் நடைபெறுகிறது
- அதிபர் கோத்தபய நாட்டை விட்டு தப்பிச் சென்றதையடுத்து, புதிய அதிபராக ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவா:
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக்கூட போதிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடம் கடன்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு நிதி உதவி அளிக்க உலக வங்கி மறுத்துளது. இது குறித்து உலக வங்கி கூறுகையில், நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டம், பொருளாதார கட்டமைப்பை வகுக்கும் வரையில், இலங்கைக்கு உதவப்போவதில்லை, புதிய நிதி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது. அதேசமயம், இலங்கையில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு, நிதி நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறியதையடுத்து இலங்கையில் பல மாதங்களாக மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரமடைந்து புரட்சியாக வலுப்பெற்ற நிலையில், அதிபர் கோத்தபய நாட்டை விட்டு தப்பிச் சென்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கியுள்ளது.
- உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.
ஜெனீவா:
ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அதனாம் டெட்ரோஸ் கூறுகையில், இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
- குரங்கு அம்மை நோய் 60க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
- குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெனீவா:
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.
குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மைநோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப் பட்டு உள்ளது.
இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
- கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
- உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஜெனீவா:
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது.
தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வகை மாறுபாடுகளில் பல நாடுகளால் நோய் தொற்று பரவி வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்கிறது. இறப்புகளின் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் கவலைப்படுகிறேன்.
ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 போன்றவை உலகம் முழுவதும் பாதிப்புகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றின் அலைகளை தொடர்ந்து இயக்குகின்றன என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறியதாவது:-
கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு புதிய மாறுபாடும் மிகவும் பரவக்கூடியதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும். அதிக எண்ணிக்கையில் பாதிப்பு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் இருக்கலாம். தற்போது மாறி வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து நாடுகளும் தரவு சார்ந்த திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்றார்.
சமீப காலமாக உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55.61 கோடியைத் தாண்டியது.
- கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63.64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 55.61 கோடியைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63.64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
- உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
- ஏழைகளில் தடுப்பூசி போடும் விகிதம் 13 சதவீதமாகத்தான் இருக்கிறது.
ஜெனீவா :
இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* மத்திய கிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு ஆசியா, அமெரிக்கா என கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அதிகபட்சமாக 47 சதவீதம் தொற்று பரவல் பெருகி இருக்கிறது.
* ஐரோப்பாவில், தென் கிழக்கு ஆசியாவில் 32 சதவீதமும், வட-தென் அமெரிக்காவில் 14 சதவீதமும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
* 110 நாடுகளில் ஒமைக்ரான் வைரசால் (குறிப்பாக பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவற்றால்) தூண்டப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று மாறி வருகிறது. ஆனால் முடிவுக்கு வந்துவிடவில்லை. கொரோனாவின் மரபணு பரிணாமத்தைக் கண்காணிக்கும் திறன் அச்சுறுத்தலில் உள்ளது. ஏனென்றால், பல நாடுகள் கொரோனா தொற்று பாதிப்பு கண்காணிப்பு மற்றும் வரிசைப்படுத்தல் முயற்சிகளை தளர்த்தின. இது நிலைமையை மேலும் மோசமாக்கும். புதிய மாறுபாடுகள் வரவும் காரணமாகும்.
உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஏழைகளில் தடுப்பூசி போடும் விகிதம் 13 சதவீதமாகத்தான் இருக்கிறது. பணக்கார நாடுகள் 6 மாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, அடுத்த சுற்றுகளுக்கு திட்டமிடுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்வது புரிந்து கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்