என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிகாரி தற்கொலை"
மும்பை கப்பரேடே பகுதியில் உலக வர்த்தக மைய கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த கட்டிடத்தின் 30-வது மாடியில் இருந்து ஒருவர் திடீரென கீழே குதித்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ஹரிந்தர் கபாடியா(வயது51) என்பதும், அவர் ஜி.எஸ்.டி. சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 7 மாதங்கள் வரை விடுமுறையில் இருந்த அவர், 3 மாதத்துக்கு முன்னர் தான் அவர் பணிக்கு திரும்பினார் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் உடல் நலக்குறைவு சரியாகாததன் காரணமாக மனஅழுத்தத்தால் அவர், இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போரூர்:
திருமங்கலம் சி.பி.டபுள்யூ. குடியிருப்பு 46-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஞானசேகர் (வயது52). தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி மார்க்ரெட். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் ஞானசேகரின் படுக்கையறை கதவு திறக்க வில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு ஞானசேகர் தற்கொலை செய்து இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் ஞானசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ஞானசேகர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்