search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திக்கடவு அவினாசி திட்டம்"

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Athikadavuavinashiproject #EdappadiPalaniswami
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.

    மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவை ரூ.66 கோடியில் மேம்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மொத்தம் ரூ.1,875 கோடியே 47 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.

    இந்த திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாஇன்று (வியாழக்கிழமை) திருப்பூர்- காங்கயம் ரோடு பத்மினி கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட அனைத்து திட்டங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தெரியாமல் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. இது மக்கள் விரோத ஆட்சி என பேசிவருகிறார்.

    வேண்டும் என்றே மக்களை குழப்பி வருகிறார். எத்தனையோ கனவு கண்டார். அத்தனை கனவுகளும் கானல் நீராகிவிட்டது. அம்மா இறந்தவுடன் அ.தி.மு.க. உடைந்து விடும் என கனவு கண்டார். அது நடக்கவில்லை. அதன் பிறகு ஆட்சி இன்று கலைந்து விடும், 6 மாதத்தில் கலைந்து விடும். இன்னும் ஒரு ஆண்டு மட்டும் தான் இந்த ஆட்சி இருக்கும் என நினைத்தார்.

    ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-வது ஆண்டையும் தொடங்கியுள்ளோம். தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பாலம் கட்ட அடிக்கல் நாட்டி அப்படியே நிறுத்திவிட்டனர். ஆனால் அந்த பாலப்பணிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

    தற்போதைய அ.தி.மு.க. அரசு அனைத்து அதிகாரிகளுடன் ஒரு முறைக்கு பல முறை ஆலோசனை நடத்தி சரியான முறையில் திட்டமிட்டு ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறோம். மத்திய, மாநில அரசு இணைந்து திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை இன்று தொடங்கியுள்ளோம்.

    இந்த திட்டங்கள் அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும். 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து திருப்பூருக்கு வருபவர்கள், இது திருப்பூரா, அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று யோசிக்க தோன்றும் அளவுக்கு திருப்பூர் மாறிவிடும்.

    இந்த திட்டங்கள் குறித்து எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. இதற்காகத்தான் இந்த திட்டங்கள் மூலம் திருப்பூருக்கு என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை எல்.இ.டி. டிவி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

    தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அ.தி.மு.க. அப்படி அல்ல. விசுவாசமாக பணியாற்றும் ஒவ்வொரு தொண்டனுக்கும் வீடு தேடி பதவி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. திருப்பூரில் 2-வது கூட்டு குடிநீர்திட்டத்தை எம்.ஜி.ஆர். அரசு நிறைவேற்றியது. 3-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இன்று 4-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா வழியில் வந்த அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

    இன்று நடைபெற்ற விழாவில் 10 பணிகளுக்கு 1807 கோடியே 45 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதும் நாங்கள் தான், 2 ஆண்டுகளில் பணிகளை முடித்து நாங்களே வந்து திறந்து வைப்போம். திருப்பூரில் மட்டும் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.



    ஸ்டாலின் ஊர், ஊராக சென்றாலும் சரி, தெரு, தெருவாக சென்றாலும் சரி, மக்கள் அவரை பற்றி நன்கு அறிந்து வைத்து உள்ளனர்.

    இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலமாக தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மின்சார துறை, உள்ளாட்சி துறை, போக்குவரத்து துறை என ஒவ்வொரு துறையும் சிறப்பாக செயல்பட்டதற்காக அ.தி.மு.க. அரசு விருது பெற்று இருக்கிறது.

    மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 14 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களது வங்கிகணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அம்மா அரசு தொழிலாளர்களின் நலன் கருதி 2 ஆயிரம் ரூபாயை அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிலர் விடுப்பட்டு உள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். உடனே அதிகாரிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளேன். விடுப்பட்டுள்ள அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை வருகிற 4-ந்தேதி சென்னையில் நான் தொடங்கி வைக்கிறேன்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்து கொண்டு இருக்கிறோம். பொது விநியோக துறை, மருத்துவ துறை போன்றவற்றில் சிறப்பான சேவையை செய்து வருகிறோம். இன்னும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக அறிந்து செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். எம்.பி.க்கள் சத்திய பாபா, மகேந்திரன், செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜய குமார், கரைப்புதூர் நடராஜன், தனியரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாக ஆணையாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, எம்.எஸ்எம். ஆனந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  #Athikadavuavinashiproject #EdappadiPalaniswami
    70 ஆண்டு கால கனவான அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். #Athikadavuavinashiproject #TNCM #Edapapdipalaniswami
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.

    மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவை ரூ.66 கோடியில் மேம்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மொத்தம் ரூ.1,875 கோடியே 47 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.

    இந்த திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாஇன்று (வியாழக்கிழமை) திருப்பூர்- காங்கயம் ரோடு பத்மினி கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

    விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    எம்.பி.க்கள் சத்திய பாபா, மகேந்திரன், செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜய குமார், கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாக ஆணையாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்எம். ஆனந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இந்த விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் அவினாசி புறப்பட்டு சென்றார்.

    திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆகும்.

    இது விவசாயிகளின் 70 ஆண்டு கால கனவு ஆகும். இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.1,532 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அவினாசி-கோவை பைபாஸ் சாலையில் எம்.நாதம்பாளையம் பிரிவு எதிரே அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பந்தலில் இன்று நடைபெற்றது.

    இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜய குமார், அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அத்திக்கடவு திட்ட போராட்ட கூட்டமைப்பினர் திருப்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பேரணியாக விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

    விழா மேடை அருகே 108 பெண்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். கூட்டமைப்பு சார்பாக முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.



    அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு போராட்ட கூட்டமைப்பினர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கோவில் முன்பு 1008 சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டு பின்னர் அவினாசி தாமரை குளத்தின் கரையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

    அவினாசி விழா முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஈரோடு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் திருப்பூர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பூர் மற்றும் அவினாசி சுற்று வட்டார பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. #Athikadavuavinashiproject #TNCM #Edapapdipalaniswami
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 28-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். #AthikadavuAvinashiProject
    அவினாசி:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதார திட்டமான அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டி கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவிநாசி புதிய பஸ் நிலையம் எதிரில் போராட்டக் குழுவினர் தொடர்ந்து 12 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதன் பலனாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இத்திட்டத்தின் ஆய்வு பணிக்காக ரூ.3.27 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அலுவலகம் ஈரோடு மற்றும் அவினாசியில் திறக்கப்பட்டது. பின்னர் ரூ.1,532 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்காக வருகிற 28-ந் தேதி அவிநாசியில் அத்திக்கடவு திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. காலை 9 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் பிரபாகரன், அவிநாசி தாசில்தார் வாணிலட்சுமி, ஜெகதாம்பாள், அவிநாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி, அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுசாமி, நகர செயலாளர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெகதீசன், ஜெயபால், ராஜேந்திரன், மூர்த்தி, தனபால், சன்முகம், உள்ளிட்ட பலர் அவிநாசி ஆட்டையாம் பாளையம், தேவராயன் பாளையம், அவிநாசி அரசு கலைக் கல்லூரி வளாகம், பழங்கரையை அடுத்த தேவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், திட்டத்திற்கான பணிகள் அடுத்தடுத்து நடந்து வருவது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்திட்டத்தினால் 843 ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குட்டைகள் நிரம்பும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து வளரும். 50 லட்சம் மக்கள் பயன்பெறுவர், கிராமங்கள் பசுமை பெறும் என்றனர். #AthikadavuAvinashiProject
    சென்னைக்கு அருகில் ரூ. 2 ஆயிரம் கோடியில் மிக பிரமாண்டமாக உணவு பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
    கோவை:

    கோவை வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்படத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    1957-ல் கோவை செங்காளி பாளையத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடு விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். விவசாயிகளின் பாசனத்துக்கு வழங்கப்பட்ட 16 மணி நேர மின்சாரம் 4 மணி நேரம் குறைக்கப்பட்டதை எதிர்த்து இவர் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினார். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக சங்கத்தை தொடங்கி விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தினார்.

    இவரின் போராட்டத்தின் பயனாக தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் உழவர் இயக்கங்கள் தொடங்கப்பட்டன.

    2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு கோவை வையம் பாளையத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி ரூ. 1½ கோடி மதிப்பீட்டில் அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு விவசாயியான நான் அதை திறந்து வைத்து உள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    இந்த அரசு விவசாயிகளுக்காக செயல்பட்டு கொண்டு இருக்கிற அரசு. விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டம் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அதிக அளவில் உணவு தானிய உற்பத்தி செய்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதான கிரிஷ்டி கர்மன் விருதை தமிழகம் பெற்றுள்ளது.



    காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட புரட்சிதலைவி சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட நாள் என் வாழ்நாளில் பொன் நாள் என்று அறிவித்து விவசாயிகளை பெருமைப்படுத்தியவர் புரட்சித்தலைவி. அதே போல விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்த இந்த நாள் எனது வாழ்க்கையின் பொன் நாள். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை பொறுத்தவரை ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாத இறுதிக்குள் நடைபெறும்.

    விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அவர்களுக்கு உரிய நீர் கிடைப்பதற்காக குடிமராமத்து திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் ஒரு சில பகுதிகள் விடுபட்டு இருந்தன. எம்.பி., எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று விடுப்பட்ட பகுதிகளான அன்னூர் மேற்கு, எஸ்.எஸ்.குளம், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளையும் சேர்ப்பதற்காக ஆய்வில் உள்ளது.

    இதே போல சென்னைக்கு அருகில் ரூ. 2 ஆயிரம் கோடியில் மிக பிரமாண்டமாக உணவு பூங்கா அமைக்கப்படும். இதற்காக 300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. உணவு பூங்காவில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை குளிர்சாதன வசதி செய்து ஏற்றுமதி செய்ய இந்த பூங்கா விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயன்படும்.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இரவு-பகல் பாராமல் உழைக்கும் ஒரு தொழிலாளி விவசாயி தான். விவசாயிகளையும், தொழிலாளிகளையும் பாதுகாக்கும் அரணாக இந்த அரசு செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami
    ×