search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனில் கும்ப்ளே"

    கும்ப்ளே வகித்து வந்த ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவி தற்போது, பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு வழங்கப்பட்டுள்ளது
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதன்பின் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.

    சவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி. தலைவர் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், சில விசயங்களால் தலைவர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அனில் கும்ப்ளே

    அனில் கும்ப்ளே கடந்த 2012-ல் இருந்து மூன்று முறை மூன்று வருட பதவிக்காலம் அடிப்படையில் அப்பதவியை வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, தற்போது அவருக்குப் பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சவுரவ் கங்குலியை கிரிக்கெட் கமிட்டியின் சேர்மன் பதவிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஐ.சி.சி. தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே-யை காட்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 12-வது சீசனில் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் தலா மூன்று முறை கோப்பைகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்பதே மில்லியன் கேள்விக்குறி?. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் காட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி சென்னைக்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வேண்டுமென்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    சென்னை அணி பந்து வீச்சில் அசத்தி வருகிறது. இது மாறுபட்ட ஆடுகளம். ஆகையால், மும்பை அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
    ஐபிஎல் 2019 சீசன் லீக் ஆட்டங்கள் அடிப்படையில் அனில் கும்ப்ளே தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். #IPL2019 #AnilKumble
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோதின. புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.

    லீக் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் விளையாட்டை ஆராய்ந்து அவர்களின் கனவு லெவன் அணியை வெளியிடுவார்கள்.

    அதன்படி இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவானும், முன்னாள் தலைமை பயிற்சியாளரும் ஆன அனில் கும்ப்ளே தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். இதில் விராட் கோலி, ஹிட்மேன் போன்றோருக்கு இடமில்லை.



    அனில் கும்ப்ளே கனவு அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:

    1. டேவிட் வார்னர், 2. கேஎல் ராகுல், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. எம்எஸ் டோனி 6. அந்ரே ரஸல், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஷ்ரேயாஸ் கோபால், 9. இம்ரான் தாஹிர், 10. ரபாடா, 11. பும்ரா
    டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் புஜாரா ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். #IPL2019
    கிரிக்கெட்டில் மிகப்பெரிய பணக்கார தொடராக ஐபிஎல் விளங்குகிறது. கிரிக்கெட் விளையாடும் முன்னணி நாடுகளில் உள்ள வீரர்கள் இதில் கலந்து கொண்டு கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்கள் கூட பங்கேற்கிறார்கள்.

    ஆனால் இந்திய அணியின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான புஜாராவை எந்த அணி உரிமையாளர்களும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    இந்நிலையில் புஜாரா ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘இசாந்த் சர்மா திறமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இரண்டையும் பெற்றுள்ளா். கடந்த சில வருடங்களாக அவர் டெஸ்ட் போட்டியில் மிகவும் அபாரமாக பந்து வீசியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாட அவர் தகுதியானவர். ஆனால் சில வீரர்கள் அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது.

    இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டும் விளையாடி வரும் இசாந்த் சர்மா மற்றும் புஜாரா போன்றோர் ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும். இறுதியாக இசாந்த் சர்மா அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்’’ என்றார்.
    கேப்டன் பதவியில் விராட் கோலி மிகவும் வசதியாக இருக்க டோனி உதவி புரிகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கியவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி துணைக் கேப்டன் ரோகித் சர்மா, எம்எஸ் டோனி ஆகியோருடன் முக்கியமான கட்டத்தில் ஆலோசனை கேட்பது வழக்கமாக கொண்டுள்ளார்.

    கடைசி டெத் ஓவர்களில் பீல்டிங் அமைக்கும் பொறுப்பை டோனியுடன் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைன் அருகே எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பீல்டிங் செய்து கொண்டிருப்பார். போட்டியை பார்க்கும்போது இது தெளிவாகத்தெரியும்.

    இந்நிலையில் கேப்டன் பதவி வகிக்கும் விராட் கோலியை மிகவும் வசதியான நபராக டோனி உருவாக்குகிறார் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விராட் கோலி சிறந்த கேப்டன் என்பதை விட, மிகவும் வசதியான கேப்டனாகவே இருக்கிறார் என்று நினைக்கிறேன். டோனி ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும்போது விராட் கோலி மிகவும் வசதியாக வளம் வருகிறார். அவருக்கும் டோனிக்கும் இடையிலான பேச்சு, சரியான முடிவை எடுக்க விராட் கோலிக்கு உதவுகிறது.



    டோனி நீண்ட காலமாக கேப்டன் பதவியில் இருந்தவர். ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் அவரால், போட்டி எந்த சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை மற்றவர்களை விட திறமையாக அறிந்து கொள்கிறார். பந்து வீச்சாளரிடம் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்க முடியும். அதேபோல் பீல்டிங்கையுட் செட் செய்ய முடியும்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என கும்ப்ளே முன்னதாகவே கணித்தது அப்படியே நடந்துள்ளது #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேயிடம் கிரிக்கெட் இணையதளம் ஒன்று இந்த போட்டி தொடர் முடிவு எப்படி? இருக்கும் என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு இந்திய அணி டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் மழையால் போட்டி எதுவும் பாதிக்கப்படுமா? என்றதற்கு, மழைக்காலம் என்பதால் போட்டி பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அவர் கணித்து சொன்ன மாதிரியே போட்டி தொடர் முடிவு மட்டுமின்றி, மழையால் ஒரு டெஸ்ட் (சிட்னி டெஸ்ட்) போட்டியும் பாதித்தது. இதனால் கும்ப்ளேயின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் கும்ப்ளேவை பாராட்டி உள்ளனர்.



    இதற்கு நேர் மாறாக இந்த போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்து கூறியது பொய்த்து போனது. அவர் ஆஸ்திரேலிய அணி 2-1 என்று தொடரை வெல்லும் என்றும், விராட் கோலியை விட ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அதிக ரன் குவிப்பார் என்று ஆருடம் தெரிவித்து இருந்தார். அவர் கூறிய இரண்டு விஷயமும் பலிக்கவில்லை.
    கர்நாடக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அனில் கும்ப்ளே டுவிட்டரில் பதிவு செய்த தகவல் வைரலாக பரவி வருகிறது. #KarnatakaElections2018 #AnilKumble
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்கை பதிவு செய்தனர்.

    இதேபோல் கிரிக்கெட் நட்சத்திரம் அனில் கும்ப்ளேவும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.



    வாக்குச்சாவடியில் சக வாக்காளர்களுடன் வரிசையில் காத்து நின்ற அவர் அதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அதில், ‘நான் ஓட்டு போடுவதற்காக காத்திருக்கிறேன். இதேபோல் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும்’ என கும்ப்ளே கேட்டுக்கொண்டார்.

    அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவை வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் 17 ஆயிரம் பேர் லைக் செய்தனர். 200 பேர் ரீடுவிட் செய்தனர். 11 மணியளவில் 39 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர். பின்னர் ஓட்டு போட்டுவெளியே வந்ததும் மையிட்ட விரலைக் காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவிட்டார். இந்த புகைப்படமும் வேகமாக பரவி வருகிறது. #KarnatakaElections2018 #AnilKumble

    ×