search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக கட்சி"

    அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #AMMK #MinisterJayakumar

    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால் தேர்தலில் அது கிடைக்காது. ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.

    எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.ம.மு.க. கட்சி ஒரு பதிவு செய்யாத கட்சி. குழந்தையே பிறக்காமல், பெயர் வைத்துக்கொண்டு அலைவதுபோல் அக்கட்சியினர் பேசி வருகிறார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami #AMMK
    சேலம்:

    சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும். பிரதமர் மோடி மீண்டும் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வர உள்ளார். 3 அல்லது 4 மாவட்ட தலைநகரங்களில் அவர் பிரசாரம் செய்கிறார். அ.ம.மு.க. கட்சி ஒரு பதிவு செய்யாத கட்சி. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தையே பிறக்காமல், பெயர் வைத்துக்கொண்டு அலைவதுபோல் பேசி வருகிறார்கள். அவர்களை நாங்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை.



    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2-ம் கட்டமாக செயல்படுத்த அனுமதி கேட்டுள்ளோம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்து உள்ளோம். ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் வெற்று அறிவிப்புகள்தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. அறிக்கையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் கூறவில்லை. #EdappadiPalaniswami #AMMK
    ×