search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு நிலங்களை ஆக்கிரமித்தால்"

    அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


    பொன்னேரி அடுத்த விட தண்டலம், கோளூர், குடி நெல்வாயில், கள்ளூர், உமிபேடுகஞ்சிவாயல், பிரளயம்பாக்கம், கடப்பாக்கம், மெரட்டூர் ஆகிய பகுதிகளில் நடை பெற்றுவரும் ஏரி மராமத்து பணிகளை கலெக்டர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார்.

    அப்போது பல இடங்களில் மராமத்து பணிகள் மேற் கொள்ள படாமலே பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒருவார காலத்திற்குள் அகற்றும்படி உத்தரவிட்டார்.

    பின்னர் கலெக்டர் சுந்தரவல்லி நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அரசு தரிசு நிலங்கள், மேய்க்கால் புறம்போக்கு விளை நிலங்கள் நீர் நிலைகள் போன்றவற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மழைக் காலத்திற்கு முன்பாக அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட பொதுப்பணி நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற் பொறியாளர் முருகன் பொன்னேரி ஆர்.டி.ஒ. முத்துசாமி, உதவி செயற் பொறியாளர் ஜெயகுரு மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, வேளாண்மை உதவி இயக்குனர் அபுபக்கர், ஆகியோர் உடனிருந்தனர்

    ×